Search

About Me

Visual Basic 2010 in Tamil

Followers

Powered by Blogger.

Friday, November 18, 2011

Lesson - 3

பாடம் இரண்டில் நாம் திரையில் தெரியப்போகும் அனைத்து வேலைகளைகளையும் முடித்து விட்டோம். இனி திரைக்கு பின்னால் என்ன நடக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். அதாவது சினிமாவில் directon மாதிரி.

 

VB2010 ஒரு Event Driven Program. அப்படின்னா என்ன? என்று தெரியாதவர்க|ளுக்காக இந்த paragraph. உங்களுக்கு தெரியும் என்றால் skip to next paragraph. Event Driven என்றால் ஒரு செயலை பொருத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது. உதாரணத்திற்க்கு ஒருவர் சினிமாவுக்கு செல்கிறார். தியேட்டர்க்கு சென்று டிக்கெட் எடுக்கிறார். உள்ளே சென்று படம் பார்க்கிறார். இதுதான் மொத்த சம்பவம். இங்கே ticket எடுப்பதுதான் Event (செயல்). அவருக்கு ticket கிடைத்தால் படம் பார்ப்பார் (இதுதான் Event Driven) இல்லையென்றால் வீட்டுக்கு போய்விடுவார். அப்போ இங்கே ஒருவருடைய program ஒரு செயலைபொருத்து முடிவு செய்யபடுகிறது. இதுதான் Event Driven Program.

 

இப்பொழுது நாம் செய்துகொண்டிருக்கும் இந்த program ஐ பொறுத்தவரை திரையில் தெரியும் Select Picture எனும் button ஐ அழுத்தியதும்(Event) திரையில் நமது Hard disk ல் உள்ள படங்களின் Filename ஐ திரையில் காண்பிக்க வேண்டும். அதன்பின் நாம் அதில் ஒரு படத்தை தேர்வு செய்து OK Button அழுத்துயதும் அந்த படம் நம்முடைய திரையில் நாம் ஏற்கனவே வைத்திருக்கிற Picture Box ல் தெரிய வேண்டும். இதற்கான Coding தான் நாம் இப்பொழுது பண்ண போகிறோம்.

 

இந்த Coding பண்ணாமலேயே நமது program ஐ run பண்ணி பார்க்கலாம் (Press F5 to Run the Program) திரையில் நாம் screen ல் desgin செய்த எல்லாம் தெரியும். ஆனால் நீங்க என்ன செய்தாலும் எதுவும் நடக்காது.

இப்பொழுது இங்கே நம்முடைய program ல் முதலில் நடக்க போகும் Event என்னவாக இருக்கும். Yes. Program Run ஆனது user , select picture எனும் button click பண்ணுவார். அப்பொழுது என்ன நடக்கனும் என்பதைதான் இப்போ எழுத போறோம். இவ்வளவு நேரமா நாம் பார்த்துக் கொண்டிருந்தது Design Screen in Visual Basic. இப்போ நாம் coding screen க்கு போகனும். எப்படி போகறது என்றால் easy method is ,  நாம் எந்த control க்கு code எழுத போறமோ அந்த control ல் mouse வைத்து double click பண்ண வேண்டும். அப்படி பண்ணும்போது VB Automatic ஆ நம்மை coding screen ல் அந்த control லின் default event க்கு கொண்டுபோய்விடும். Note this ,அந்த control லின் default event க்கு கொண்டு போய்விடும். அங்கிருந்து நாம் எந்த event க்கு code எழுதனுமோ அதை select செய்துகொண்டு coding எழுத ஆரம்பிக்கலாம்.

 

இங்கே நாம் code எழுதபோவது button cotrol லுக்கு. எனவே அந்த button control லில் வைத்து double click பண்ணினால் கீழே தெரிவது போன்ற screen ல் நாம் இருப்போம்.

image

இங்கே 1  என்பது code window , 2 என்பது solution explorer , 3 என்பது properties window. இதெல்லாம் எதற்கு என்பதை பின்பு பார்க்கலாம்.

button ஐ பொறுத்தவரை click தான் default event.  நமக்கு அதுதான் தேவை. அதனால் நேராக code எழுத ஆரம்பித்துவிடலாம்.

image

private sub என்று ஆரம்பித்து, End Sub என்று முடியும் வரை உள்ள் எல்லா command களையும் நாம் பட்டனை கிளிக் செய்ததும் கம்ப்யுட்டர் ரன் செய்யும். இப்பொழுது நாம் எழுத வேண்டிய code.

image

Code Meaning

Private Sub BtnSelectPicture_Click(ByVal sender As System.Object, ByVal e As System.EventArgs) Handles BtnSelectPicture.Click

btnselectpicture என்ற பட்டனை user click செய்தால் கீழே உள்ள code run ஆகும்.

If ofdSelectpicture.ShowDialog = DialogResult.OK Then

ofdSelectpicture என்ற control open ஆகி ஒரு விண்டோ காண்பிக்கும். அதில் நாம் நமக்கு தேவையான் படத்தை OK எனும் button press செய்தால் அடுத்த line run ஆகும்.

picShowPicture.Image = Image.FromFile(ofdSelectpicture.FileName) இந்த line ல் நாம் ஏற்கனவே form ல் வைத்திருக்கிற picShowPicture எனும் picturebox ன் image file name  நாம் தேர்வு செய்த

ofdSelectpicture.ShowDialog என்ற control லின் filename என்பதை சொல்லிவிடுகிறோம். இவ்வாறு சொன்ன உடனேயே அந்த picturebox control அந்த filename ல் உள்ள படத்தை எடுத்து திரையில் காட்டிவிடும்.

Me.Text = "Picture Viewer(" & ofdSelectpicture.FileName & ")" இந்த line ல் நாம் நம்முடைய window வின் பெயரை மாற்றுகிறோம். எப்படியென்றால் Picture Viewer அப்புறம் நாம் தேர்வு செய்த படத்தின் பெயரையும் அதில் சேர்த்துவிடுகிறோம். அப்போதான் user க்கு எந்த படம் திரையில் தெரிகிரது என்பது தெரியும்.
End If User OK press செய்திருந்தால் என்ன செய்யனும் என்கிற condion இங்கே முடிகிறது.

 

இப்பொழுது நம்முடைய முதல் VB program கிட்டதட்ட ரெடியாகிவிட்டது. இப்போ நீங்கள் F5 அழுத்தி Run செய்துபார்க்கலாம்.

இந்த program முழுதும் முடியனும் என்றால் இன்னும் ஒரு command கொடுக்க வேண்டியது இருக்கிறது. அது coding for Quit Button . அது இதுதான்

image

இனிமேல் நீங்கள் செய்த program ஐ F5 அழுத்தி Run செய்து பாருங்கள்.