Search
About Me
- VB2010
- Visual Basic 2010 in Tamil
Followers
Friday, November 18, 2011
Lesson - 3
பாடம் இரண்டில் நாம் திரையில் தெரியப்போகும் அனைத்து வேலைகளைகளையும் முடித்து விட்டோம். இனி திரைக்கு பின்னால் என்ன நடக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். அதாவது சினிமாவில் directon மாதிரி.
VB2010 ஒரு Event Driven Program. அப்படின்னா என்ன? என்று தெரியாதவர்க|ளுக்காக இந்த paragraph. உங்களுக்கு தெரியும் என்றால் skip to next paragraph. Event Driven என்றால் ஒரு செயலை பொருத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது. உதாரணத்திற்க்கு ஒருவர் சினிமாவுக்கு செல்கிறார். தியேட்டர்க்கு சென்று டிக்கெட் எடுக்கிறார். உள்ளே சென்று படம் பார்க்கிறார். இதுதான் மொத்த சம்பவம். இங்கே ticket எடுப்பதுதான் Event (செயல்). அவருக்கு ticket கிடைத்தால் படம் பார்ப்பார் (இதுதான் Event Driven) இல்லையென்றால் வீட்டுக்கு போய்விடுவார். அப்போ இங்கே ஒருவருடைய program ஒரு செயலைபொருத்து முடிவு செய்யபடுகிறது. இதுதான் Event Driven Program.
இப்பொழுது நாம் செய்துகொண்டிருக்கும் இந்த program ஐ பொறுத்தவரை திரையில் தெரியும் Select Picture எனும் button ஐ அழுத்தியதும்(Event) திரையில் நமது Hard disk ல் உள்ள படங்களின் Filename ஐ திரையில் காண்பிக்க வேண்டும். அதன்பின் நாம் அதில் ஒரு படத்தை தேர்வு செய்து OK Button அழுத்துயதும் அந்த படம் நம்முடைய திரையில் நாம் ஏற்கனவே வைத்திருக்கிற Picture Box ல் தெரிய வேண்டும். இதற்கான Coding தான் நாம் இப்பொழுது பண்ண போகிறோம்.
இந்த Coding பண்ணாமலேயே நமது program ஐ run பண்ணி பார்க்கலாம் (Press F5 to Run the Program) திரையில் நாம் screen ல் desgin செய்த எல்லாம் தெரியும். ஆனால் நீங்க என்ன செய்தாலும் எதுவும் நடக்காது.
இப்பொழுது இங்கே நம்முடைய program ல் முதலில் நடக்க போகும் Event என்னவாக இருக்கும். Yes. Program Run ஆனது user , select picture எனும் button click பண்ணுவார். அப்பொழுது என்ன நடக்கனும் என்பதைதான் இப்போ எழுத போறோம். இவ்வளவு நேரமா நாம் பார்த்துக் கொண்டிருந்தது Design Screen in Visual Basic. இப்போ நாம் coding screen க்கு போகனும். எப்படி போகறது என்றால் easy method is , நாம் எந்த control க்கு code எழுத போறமோ அந்த control ல் mouse வைத்து double click பண்ண வேண்டும். அப்படி பண்ணும்போது VB Automatic ஆ நம்மை coding screen ல் அந்த control லின் default event க்கு கொண்டுபோய்விடும். Note this ,அந்த control லின் default event க்கு கொண்டு போய்விடும். அங்கிருந்து நாம் எந்த event க்கு code எழுதனுமோ அதை select செய்துகொண்டு coding எழுத ஆரம்பிக்கலாம்.
இங்கே நாம் code எழுதபோவது button cotrol லுக்கு. எனவே அந்த button control லில் வைத்து double click பண்ணினால் கீழே தெரிவது போன்ற screen ல் நாம் இருப்போம்.
இங்கே 1 என்பது code window , 2 என்பது solution explorer , 3 என்பது properties window. இதெல்லாம் எதற்கு என்பதை பின்பு பார்க்கலாம்.
button ஐ பொறுத்தவரை click தான் default event. நமக்கு அதுதான் தேவை. அதனால் நேராக code எழுத ஆரம்பித்துவிடலாம்.
private sub என்று ஆரம்பித்து, End Sub என்று முடியும் வரை உள்ள் எல்லா command களையும் நாம் பட்டனை கிளிக் செய்ததும் கம்ப்யுட்டர் ரன் செய்யும். இப்பொழுது நாம் எழுத வேண்டிய code.
| Code | Meaning |
| Private Sub BtnSelectPicture_Click(ByVal sender As System.Object, ByVal e As System.EventArgs) Handles BtnSelectPicture.Click | btnselectpicture என்ற பட்டனை user click செய்தால் கீழே உள்ள code run ஆகும். |
| If ofdSelectpicture.ShowDialog = DialogResult.OK Then | ofdSelectpicture என்ற control open ஆகி ஒரு விண்டோ காண்பிக்கும். அதில் நாம் நமக்கு தேவையான் படத்தை OK எனும் button press செய்தால் அடுத்த line run ஆகும். |
| picShowPicture.Image = Image.FromFile(ofdSelectpicture.FileName) | இந்த line ல் நாம் ஏற்கனவே form ல் வைத்திருக்கிற picShowPicture எனும் picturebox ன் image file name நாம் தேர்வு செய்த ofdSelectpicture.ShowDialog என்ற control லின் filename என்பதை சொல்லிவிடுகிறோம். இவ்வாறு சொன்ன உடனேயே அந்த picturebox control அந்த filename ல் உள்ள படத்தை எடுத்து திரையில் காட்டிவிடும். |
| Me.Text = "Picture Viewer(" & ofdSelectpicture.FileName & ")" | இந்த line ல் நாம் நம்முடைய window வின் பெயரை மாற்றுகிறோம். எப்படியென்றால் Picture Viewer அப்புறம் நாம் தேர்வு செய்த படத்தின் பெயரையும் அதில் சேர்த்துவிடுகிறோம். அப்போதான் user க்கு எந்த படம் திரையில் தெரிகிரது என்பது தெரியும். |
| End If | User OK press செய்திருந்தால் என்ன செய்யனும் என்கிற condion இங்கே முடிகிறது. |
இப்பொழுது நம்முடைய முதல் VB program கிட்டதட்ட ரெடியாகிவிட்டது. இப்போ நீங்கள் F5 அழுத்தி Run செய்துபார்க்கலாம்.
இந்த program முழுதும் முடியனும் என்றால் இன்னும் ஒரு command கொடுக்க வேண்டியது இருக்கிறது. அது coding for Quit Button . அது இதுதான்
இனிமேல் நீங்கள் செய்த program ஐ F5 அழுத்தி Run செய்து பாருங்கள்.
Tuesday, October 18, 2011
Lesson – 2
இனிமேல் சும்மா என்ன options இருக்கிறது என்பதை பார்ப்பதற்க்கு பதிலாக ஒரு புதிய program உருவாக்குவோம்.
இந்த program கீழ்கண்ட வேலைகளை செய்ய போகிறது.
1. ஒரு சிறிய VB2010 program உருவாக்க போகிறோம்.
2. அதில் user கணனியை browse செய்து ஒரு பட்த்தை தேர்ந்த்தெடுக்க வழி இருக்க வேண்டும்.
3. அவ்வாறு தேர்ந்த்தெடுத்த படம் நம்முடைய form இல் தெரிய வேண்டும்.
இதை செய்ய நாம் செய்ய வேண்டியது..
1. Open VB2010 (Figure - 1)
2. Create New Project (Figure -2)
3. Choose Window Forms Application then Give a name for the Application (eg. ViewerForm) then click OK button.
நாம் மேலே சொல்லப்பட்ட steps செய்தால் Fig-6 இல் இருப்பது போன்ற screen நமக்கு தெரியும். ஆனாலும் சில வேலைகள் செய்தால்தால்தான் 100% மேலே உள்ளது போன்ற screen நமக்கு கிடைக்கும். அவை என்ன என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
1.இந்த form பெயர் Picture Viewer என்று வைக்க வேண்டும்
இதை செய்ய form – select செய்து property window வில் text property select செய்து அங்கே Picture Viewer என்று type செய்ய வேண்டும்.
| Figure 7 |
2.இந்த form ற்க்கு ஒரு icon (file attached in icons folder) கொடுக்க வேண்டும்.
இதை செய்யவும் அதே போல form select செய்து icon property யில் உங்களுக்கு பிடித்த icon file தேர்ந்த்தெடுத்துக் கொள்ளவும்
| Form size ஐ பெரிதாக்க வேண்டும் என்றால் இரண்டு முறைகளில் செய்யலாம். 1. Form ன் மூலையில் mouse pointer ஐ கொண்டு சென்று click செய்து விடாமல் அப்படியே பிடித்து இழுத்தால் form ஐ பெரியதாகவோ சிறியதாகவோ ஆக்கலாம். அல்லது form property windowவில் size property யில் தேவையான size கொடுக்கலாம். |
இனி செய்ய வேண்டியது நமக்கு தேவையான controls ஐ form னுள் கொண்டு வரவேண்டும். நம்க்கு என்ன தேவை என்பதை முதலில் பார்ப்போம்.
1. இரண்டு Button Control
2. ஒரு Picture Box Control (நம்முடைய பட்த்தை திரையில் தெரிய வைக்க
3. ஒரு Openfile Dialogue Control – இந்த control ஐ வைத்துதான் நாம் தேவையான பட்த்தை தேர்ந்த்தெடுக்க போகிறோம்.
Adding Visible Controls to the Form:
ToolBox இல் உள்ள button என்ற control ஐ double click செய்தால் அந்த button நம்முடைய திரையில் தானாகவே மேலே இடது மூலையில் வந்துவிடும். அல்லது button control இல் click செய்து இழுத்தாலும் button தானாகவே நாம் கொண்டு செல்லும் இட்த்தில் வந்து அமர்ந்துகொள்ளும். நமக்கு இங்கே இரண்டு button தேவைபடுவதால் இரண்டு முறை இவ்வாறு செய்து கொள்ளவும்.
இப்பொழுது முதல் button னுக்கு பின்வரும் options செய்துகொள்ளவும்.
Name : BtnSelectPicture
Text : Select Picture
இப்பொழுது இரண்டாவது buttonனுக்கு பின்வரும் options செய்துகொள்ளவும்.
Name : BtnQuit
Text : Quit
மேலே உள்ள இந்த இரண்டு option ஐயும் property Window வில் போய் செய்துகொள்ளலாம். பின் இந்த இரண்டு button களையும் பின்வரும் பட்த்தில் இருப்பது போன்ற இட்த்தில் வைத்துக் கொள்ளவும்.
இனி மூன்றாவதாக நாம் சேர்க்க போவது ,ஏற்கனவே சொன்னது போன்று ஒரு PictureBox control. இதுவும் tool box இல்தான் இருக்கும்.அதை Dblclick செய்து திரையில் வந்த அப்புறம் அதனுடைய ஒரங்களை இழுத்து நமக்கு தேவையான size க்கு மாற்றி பின்பு buttonக்கு கொடுத்த்து போன்று இதற்க்கும் அதனுடைய property set செய்ய வேண்டும். நினைவு கொள்ளுங்கள்.இந்த picture box control வெறும் பட்த்தைதான் காட்டப்போகிறது.அதனால் இதற்க்கு எந்த text optionம் கிடையாது.எனவே இதற்க்கு Name : picShowPicture என்று கொடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன அனைத்தும் செய்து முடித்தால் உங்களது திரை இது போன்று இருக்கும்.
Adding Invisible Control to the Form.
இதுவரை நாம் திரையில் சேர்த்த control எல்லாமே visible controls. அதாவது நீங்கள் இந்த ப்ராஜெக்டை run பண்ணும்போது திரையில் தெரியும். இப்பொழுது நாம் சேர்க்க போவது invisible control. அதாவது இந்த control கண்டிப்பாக தேவை.ஆனால் நாம் அது திரையில் தெரியாது.(இருக்கும்.... ஆனா இருக்காது.....). இப்பொழுது இந்த program ஐ பொருத்தவரை, user , select picture என்ற button ஐ கிளிக்கிய உடன், நம்ம வந்தட்டில் (Hard Disk) இருக்கும் file களை காட்ட வேண்டும். இதை எந்த programming knowledge உம் இல்லாமல் நாம் செய்ய முடியும். அதற்க்குதான் இந்த Openfile Dialogue Control. இதுவும் நம்ம toolbox ல் தான் இருக்கிறது.
இப்பொழுது அதை dblclick செய்த்தும், நம்முடைய திரை கீழே உள்ளது போல இருக்கும்.
இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது நாம் dblclick செய்த்த்தும் அந்த control திரையில் விழாது.இது ஒரு invisible control ஆகையால் இது கீழே உள்ள container இல் இருக்கும்.
இப்பொழுது நாம் இந்த openfiledialog control லுக்கு கீழ்கண்ட property set செய்ய வேண்டும்.
Name :OfdSelectPicture
Filter: Windows Bitmaps|*.BMP|JPEG Files|*.JPG (இதை ஏன் கொடுக்கிறோம் என்றால், நமக்கு இந்த வகையான பட file களை மட்டும் காட்டினால் போதும் என்பதனால்...)
Title : Select Picture
FileName : இந்த இட்த்தில் எதுவுமே கொடுக்காமல் blank ஆக விட்டுவிடவும்.
இத்துடன் front end எனப்படும் designing of form முடிந்த்து. இனி நாம் இந்த control களுக்குள்ள program எழுத வேண்டியதுதான் மீதி.
Sunday, October 16, 2011
Lesson –1
இந்த புதிய நிரலின் முகப்பு இப்படித்தான் இருக்கும்
1. The New Project/Open Project section. புதிய அல்லது பழைய ப்ரோக்ராமை திறக்க
2. The Recent Projects section சமீபமாக நாம் வேலை செய்த ப்ராஜெக்ட்
3. The Getting Started Pane. எப்படி தொடங்குவது சம்பந்தமான உதவிகள்
4. The Latest News section- VB2010 பற்றிய புதிய செய்திகள்...
5. The Properties section
புதிய ப்ராஜெக்ட் தொடங்க நீங்கள் Create New Project ஐ click செய்தால் கீழ்க்கண்ட விண்டோ திறக்கும்.
| Figure 3 |
இப்போது கிட்ட்தட்ட Vb6 போன்ற ஒரு விண்டோ வரும். கீழே உள்ள படம் போல.
இப்போதைக்கு நமக்கு தெரிய வேண்டியது, ஒரு Empty Form திறந்திருக்கிறது. அந்த Form - ன் Property window சைடில் திற்ந்திருக்கிறது.
What is Property Window :
இங்கே நாம் Property Window என்றால் என்ன என்பதை பார்த்துவிட்டால் இனி வரும் பாடங்களில் இலகுவாக இருக்கும். உங்களுக்கு தெரிந்திருக்கும். Property என்றால் பண்புகள். இப்போ ஒரு மனிதரை எடுத்துக் கொண்டால் அவருக்கென்று சில பண்புகள் இருக்கும். அதாவது அவர் கருப்பு கலரில் இருப்பார். 7 அடி உயரம் இருப்பார். வெள்ளை சட்டை அணிந்திருப்பார். கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருப்பார். இது போன்றவை அவருடைய பண்புகள். அதுபோல இப்போது நாம் திறந்திருக்கும் Form -ன் பண்புகள் அந்த் window வில் இருக்கும். இது எப்போதுமே form ன் பண்புகளை மட்டும் காட்டாது. எந்த பொருளை நாம் தேர்ந்தெடுத்தி வைத்திருக்கிரோமோ அந்த பொருளின் பண்புகளை காட்டும். இதை நாம் நம் விருப்பத்திற்க்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
Tool Box :
இப்போது நாம் பார்க்க வேண்டியது ... Form1 என்பதற்க்கு அருகில் இருக்கும் Tool Box என்பதை. அதை க்ளிக் செய்தால் கீழே உள்ளதை போல தெரியும்.
இங்கேதான் நமக்கு தேவையான Tools எல்லாம் இருக்கிறது. இதைதான் ToolBar என்பார்கள். இப்போ ஒரு ஆசாரி வேலைக்கு போகனும் என்றால் அவருக்கு என்று சில உபகரணங்கள் இருக்கும் அல்லவா அதைதான் ToolBox என்கிறோம். இங்கே நமக்கு என்ன என்ன tools தேவைபடும். நம்முடைய form என்ன வேண்டுமோ அதை இங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம். உதாரண்மாக நம்முடைய பெயர் அந்த form ல் தெரியனும் என்றால் Label tool ஐ எடுத்து Form ல் கொண்டு வைத்துக்கொண்டு அதனுடைய properties ஐ மாற்றினால் நம்முடைய பெயர் தெரிய வைத்துவிடலாம். நமக்கு இந்த் form ல் ஒரு பட்டன் தேவை படுகிறது என்று வைத்திக் கொள்வோம். Button என்ற tool ஐ இழுத்து form ல் போட்டால் வேலை முடிந்த்து.
ஆனால் நாம் form இல் பார்க்கும் போது அந்த button form னுள் வந்த்தும் நாம் ஏற்கனவே பார்த்த property window ஐ பயன்படுத்தி அதனுடைய Text property ஐ OK என்று மாற்றிக் கொள்ளலாம்.
இனிமேல் சும்மா என்ன options இருக்கிறது என்பதை பார்ப்பதற்க்கு பதிலாக அடுத்த பகுதியில் ஒரு புதிய program உருவாக்குவோம்.
Wednesday, April 13, 2011
Visual Basic 2010 In Tamil - விரைவில்

Visual Basic வகை Programming Language ன் புதிய பதிப்புதான் இந்த Visual Basic 2010. நீங்கள் இதற்க்கு முன் VB2008 உபயோகபடுத்தியிருந்தால் இதுவும் அதைப்போலவேதான். ஆனால் நிறைய புதிய வசதிகளை உள்ளடக்கி இருக்கிறார்கள். நீங்கள் VB6 பயன்படுத்தியிருந்தால் இதில் நிறைய மாற்றங்கள் காண்பீர்கள்.
இந்த முயற்சி எல்லாருக்கும் பயன்படும் வகையில் எளிமையாய் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது , VB2010 ஒரு முழு Object Oriented Language (OOP). OOP என்றால் என்ன என்று தெரியும் என்றால் சரி, எனக்கு தெரியாதே என்று நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம். அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இப்போது இல்லை. தொடர்ந்து படியுங்கள்.VB6 user-க்கு இது மிகவும் எளிதாக படிக்க கூடியவகையில் தான் உள்ளது.
உங்களுக்கு இந்த புதிய நிரல் டவுன்லோட் செய்ய வேண்டுமானால் http://www.microsoft.com/express/downloads/ இங்கே செல்லலாம்.
இந்த தளத்திற்க்கு சென்று தேவையான Express Edition Download செய்து ரெடியாக இருங்கள். ஒவ்வொரு வாரமும் இரண்டு பாடங்கள் Post செய்யப்படும். இங்கே நாம் பார்க்கப் போவது கணனியை பற்றி கொஞ்சம் விஷயம் தெரிந்தவங்ளுக்கும் புரியுற மாதிரிதான் இருக்கும். அதனால் Get Ready To Explore...