Search

About Me

Visual Basic 2010 in Tamil

Followers

Powered by Blogger.

Sunday, October 16, 2011

Lesson –1

இந்த புதிய நிரலின் முகப்பு இப்படித்தான் இருக்கும்

image

1. The New Project/Open Project section. புதிய அல்லது பழைய ப்ரோக்ராமை திறக்க

2. The Recent Projects section சமீபமாக நாம் வேலை செய்த ப்ராஜெக்ட்

3. The Getting Started Pane. எப்படி தொடங்குவது சம்பந்தமான உதவிகள்

4. The Latest News section- VB2010 பற்றிய புதிய செய்திகள்...

5. The Properties section

 

புதிய ப்ராஜெக்ட் தொடங்க நீங்கள் Create New Project ஐ click செய்தால் கீழ்க்கண்ட விண்டோ திறக்கும்.

image

Figure 3

இந்த விண்டோ நிறைய வகையான வாய்ப்புகள் கொடுத்தாலும் நாம் முதலில் பார்க்க போவது Window Forms Application தான். அதனால் Window Forms Application ஐ க்ளிக் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Name எனும் இட்த்தில் நம்முடைய விருப்பத்திற்க்கு ஏற்ப பெயர் கொடுத்துக் கொள்ளவும். பிறகு ok வில் க்ளிக் செய்யவும்.

இப்போது கிட்ட்தட்ட Vb6 போன்ற ஒரு விண்டோ வரும். கீழே உள்ள படம் போல.

 

image

இப்போதைக்கு நமக்கு தெரிய வேண்டியது, ஒரு Empty Form திறந்திருக்கிறது. அந்த Form - ன் Property window சைடில் திற்ந்திருக்கிறது.

What is Property Window :

இங்கே நாம் Property Window என்றால் என்ன என்பதை பார்த்துவிட்டால் இனி வரும் பாடங்களில் இலகுவாக இருக்கும். உங்களுக்கு தெரிந்திருக்கும். Property என்றால் பண்புகள். இப்போ ஒரு மனிதரை எடுத்துக் கொண்டால் அவருக்கென்று சில பண்புகள் இருக்கும். அதாவது அவர் கருப்பு கலரில் இருப்பார். 7 அடி உயரம் இருப்பார். வெள்ளை சட்டை அணிந்திருப்பார். கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருப்பார். இது போன்றவை அவருடைய பண்புகள். அதுபோல இப்போது நாம் திறந்திருக்கும் Form -ன் பண்புகள் அந்த் window வில் இருக்கும். இது எப்போதுமே form ன் பண்புகளை மட்டும் காட்டாது. எந்த பொருளை நாம் தேர்ந்தெடுத்தி வைத்திருக்கிரோமோ அந்த பொருளின் பண்புகளை காட்டும். இதை நாம் நம் விருப்பத்திற்க்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

Tool Box :

இப்போது நாம் பார்க்க வேண்டியது ... Form1 என்பதற்க்கு அருகில் இருக்கும் Tool Box என்பதை. அதை க்ளிக் செய்தால் கீழே உள்ளதை போல தெரியும்.

image

இங்கேதான் நமக்கு தேவையான Tools எல்லாம் இருக்கிறது. இதைதான் ToolBar என்பார்கள். இப்போ ஒரு ஆசாரி வேலைக்கு போகனும் என்றால் அவருக்கு என்று சில உபகரணங்கள் இருக்கும் அல்லவா அதைதான் ToolBox என்கிறோம். இங்கே நமக்கு என்ன என்ன tools தேவைபடும். நம்முடைய form என்ன வேண்டுமோ அதை இங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம். உதாரண்மாக நம்முடைய பெயர் அந்த form ல் தெரியனும் என்றால் Label tool ஐ எடுத்து Form ல் கொண்டு வைத்துக்கொண்டு அதனுடைய properties ஐ மாற்றினால் நம்முடைய பெயர் தெரிய வைத்துவிடலாம். நமக்கு இந்த் form ல் ஒரு பட்டன் தேவை படுகிறது என்று வைத்திக் கொள்வோம். Button என்ற tool ஐ இழுத்து form ல் போட்டால் வேலை முடிந்த்து.

ஆனால் நாம் form இல் பார்க்கும் போது அந்த button form னுள் வந்த்தும் நாம் ஏற்கனவே பார்த்த property window ஐ பயன்படுத்தி அதனுடைய Text property ஐ OK என்று மாற்றிக் கொள்ளலாம்.

image

இனிமேல் சும்மா என்ன options இருக்கிறது என்பதை பார்ப்பதற்க்கு பதிலாக அடுத்த பகுதியில் ஒரு புதிய program உருவாக்குவோம்.

No comments:

Post a Comment